Wednesday, March 30, 2011
Tuesday, March 29, 2011
நான் பிறந்தது கிளிநொச்சி மாவட்டம் அங்கு திருவையாறு என்ற
ஒரு கிராமத்தில் பிறந்தேன். சின்ன ஊர் ஆனா நிறைவான ஊர்
போர்ச்சூழல் எங்கள் ஊரையும் வருத்தியது. அதனால் என் ஊர் என் பெயர் சொல்ல
நீயும் வேண்டும் விட்டு போ என்றது. ஊரை மட்டும் பிரிந்து வந்தேன் சின்ன வயதிலேயே...
ஊட்டி வளர்க்க அம்மா இல்லை பாசம் தர தந்தை இருந்தும் இல்லை ஓகே அத விடுங்க
இவை எனக்கு ஒரே இடத்தில் நிறைவாக கிடைத்தது என் அத்தையிடம்
மேலும் வருவோம்
சின்ன சின்ன விருப்பு வெறுப்புக்கள்
சில மாற்றங்கள் மனதிலும் சரி நாம் இருக்கும் இடத்திலும் சரி
இருக்க வேண்டும் எமக்காக நாம் தான் யோசிக்க வேண்டும்
அப்படி யோசித்து தான் நான் இங்கு வந்தேன். சிறப்பான வாழ்வை எதிர்பார்த்து
சரி என்னை பற்றி கொஞ்சம் சொல்லுறன்
ஒருத்தனுக்கு புத்திமதி சொல்லி சொல்லியே வாழ்க்கை யை கொண்டு போபவனை
பார்த்தா அவனை பற்றி அறிய ஆவல் உள்ளவன்நான். தான் சரியாக இருப்பவனே மற்றவனுக்கு
அட்வைஸ் பண்ணனும் ..
நல்வழிப்படுத்த நாம் ஒன்றும் விவேகானந்தர் இல்லை அவரும் ஒரு சாதாரண மனிதன் தான்
அவர் தன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக்கொண்டார். தனது மகிழ்ச்சிக்கு கருவியையும்
கண்டு பிடித்தார் அதை மற்றவனில் திணிக்கவில்லை என் மகிழ்ச்சிக்கு காரணம் இது தான் என்றார்
தேவையானவர்கள் கடைப்பிடியுங்கள் என்றார்.
Monday, March 28, 2011
என்னை பற்றி
நான் நதீஸ் ஆங்கிலத்தில் பெயர் குறிப்பிட்டு இருக்குறேன் தமிழில் குறிப்பிட்டாதான் ஒரு நிம்மதி
நான் இந்த வானொலி அறிவிப்பு துறைக்கு நுழைந்து ஒரு வருடங்களும் சில மாதங்களுமே ஆகிறது
இப்பொழுது நான் வெற்றி FM இன் அறிவிப்பாளன் முன்பிருந்த வானொலியில் சில விடயங்களை
கற்றதால் என்னால் வெற்றியில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்குறது
வெற்றியை தேடி வந்தோம் லோஷன் அண்ணாவின் அன்புக்கரம் எங்களையும் அணைத்தது
வந்தார்கள் சென்றார்கள் என்று யாரும் சொல்லாத அளவுக்கு இருக்க வேண்டும் என்று உறுதி
பூண்டு இருக்குறோம் வந்தார்கள் வென்றார்கள் இந்த வார்த்தை தான் எமக்கு வேண்டும்
Subscribe to:
Posts (Atom)