Saturday, November 5, 2011

என் மண்





அண்மையில் என் மண்ணுக்கு சென்றிருந்தேன். 
காலடி எடுத்து வைத்தவுடனே என்னை அறியாமல் கண்ணில் நீர்...
 எனது கை என்னை அடிக்கவுமில்லை, என்விரல் கண்ணை குத்தவுமில்லை 
ஆனாலும் கண்ணீர் பல வருடங்களுக்கு பிறகு சென்றதாலாக இருக்கலாம் .
கொடுமைகளை சுமந்த மண், அடிகளை தாங்கிய மண், நெருப்பை ஏந்திய  மண், இரத்தம் தேங்கிய மண் இவ்வாறு நிறைய பெயர்களை சுமந்த மண் 
என்னை வாரி முத்தமிட்டது மரத்தின் வேரால் தடக்க வைத்து... 
எவளவு வீரமான மண் இன்று சோகமாய் காட்சி தருகிறது .என் மகனே வா நீயாவது இருக்குறியே என்று என்னை அணைப்பது போல் இருந்தது .
வாய்க்கால்களை பார்க்கும் போது செங்குருதி ஓடுவது போல் இருக்குறது. என்னை அறியாமல் மனது வலிக்கிறது கனக்கிறது எவளவு கொடுமைகளை 
தாங்கியிருக்குறது எனது மண். எத்தனை மைந்தர்களை இழந்திருக்குறது நினைக்கவே உள்ளம் கலங்குகிறது 
ஒரு தாய் தான் பெற்ற அனைத்து பிள்ளைகளையும் இழந்தால் எப்படி இருப்பாள்? அப்படி தான் இன்று என் மண் இருக்குறது. 
தன்னால் இனி திருப்பி அடிக்க முடியாது.., கொடுமைகளை துரோகங்களை என் பிள்ளைக்களுக்கு திணிக்காதீர்கள்.. என்று யாரையோ பாத்து கெஞ்சுவது போல் இருக்குறது வன்முறை கொண்டு திருப்பி அடிப்பதால் பலனில்லை கல்வியால், அறிவால், புத்தியால், மதியால், நடத்தையால் ,கௌரவத்தால், தர்க்கத்தால், பொறுமையால், புலமையால், இசையால் திருப்பி அடியுங்கள் என்று தன் பிள்ளைகளுக்கு எஞ்சியவர்களுக்கு சொல்வது போல் இருக்குறது, 
மண்ணின் பெருமையை நிலைநாட்ட அடி தடி மட்டுமல்ல இப்படியும் நிலை நாட்டலாம் இனி ஒரு புது விதி செய்வோம் என்று சொல்வதை விட செய்யுங்கள் உங்கள் விதிகளை நீங்களே எழுதுங்கள் 


மழை பெய்யும் போது என் ஊர் மண் மணக்கவில்லை மாறாக இரத்த வாடை தான் வருகிறது.
தயவு செய்து நாளைய சமுதாயம் மண்ணை உங்கள் தகமைகளால் குளிரவையுங்கள் .
மதுக்கடை வாசலை நிரப்ப யாரும் முன்வரவேண்டம்.. பாடசாலை வாசலை நிரப்புங்கள் .
விளையாட்டுக்களை ஊக்குவியுங்கள் நாளைய சமுதாயத்தால் தாய் போலே தாய் மண்ணும் குளிரும் .....
இழப்புக்களை ஈடுகட்ட முடியாது ஓரளவு ஈடுகட்ட முயற்சி எடுங்கள் இதை தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை ....
என்றுமே என் தாய்... என் மண் தான்... வீரம் சுமந்த என் மண், வீரர்களை தந்த மண் வீரத்துக்கு எப்பவுமே பெயர் பெற்று விளங்கும்.
இனி எமக்கு விவேகம் தான் முக்கியம் 
குனிவதும் பணிவது இனி இல்லை தமிழ் குடியினிற்கழிவில்லை 
இருளே விலகி ஒளி விடு .......

Thursday, November 3, 2011

                    7ஆம் அறிவு 






சூரியா நடிப்பு ஒரே மாதிரி இருந்தாலும் பாக்க சலிக்கவில்லை 
முருகதாஸ் உங்களுடைய எங்களுக்கான வசனங்களுக்கு தலை வணங்குகின்றேன் நன்றி சூப்பர் மேலும் உங்களிடம் இருந்து நிறைய எதிர் பாக்குறம் 


வாத்தியார் பிள்ள மக்கு ஏன்டா மாதிரி எந்த உணர்வும் இல்லாம உலக நாயகன் மகள் நடித்திருந்தாலும் அதை பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லாம சூரியாவும் முருகதாசும் நெகிழ வைச்சுருக்குறாங்க 
தமிழன் வீரமும் மானமும் என்னும் போகவில்லை... போகாது... 
இனி வரலாறுகள் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஓவருவருக்கும் வரும் ....



மீண்டும் ,மீண்டுமா...................

அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்...
 நீண்ட நாட்களுக்கு பிறகு எழுத வைத்த வேலாயுதம் மற்றும்7 ஆம் அறிவு திரைப்படங்களுக்கு நன்றி 

உண்மையிலேயே நான் விஜய் ரசிகன் இப்ப இல்ல அப்ப...... 
எனக்கு தியட்டர் போய் பாக்குற வாய்ப்பு கிடைக்கல வீட்டDVD பிளேயர் இருக்கு நம்புங்கோ.... 
செக்கன்ட் காப்பி வாங்கி போட்டு பாத்தன் பாத்துட்டு தான் எழுதுறன். 
                                                 வேலாயுதம் 


விஜய்க்காக வருந்துகின்றேன் எவளவோ பண்ணிட்டம் இத பண்ணமாட்டமோ
பாவம் விஜய் அரசியல் பக்கம் போறது தான் நல்லம் படம் ஆரம்பித்தவுடன் தாயின் மணிக்கொடி CD 
போட்டுட்டனோ எண்டு திருப்ப எடுத்து பாத்தன் இல்ல இல்ல வேலாயுதம்தான். 
முதல் சீன்..>> 
ஐயோ பிறகு மாறி வேடன் படம் போட்டுட்டனோ எண்டு நினைச்சன் வேடனில அக்கா ஜெனிலியா இல்ல,,,,,............
பிறகு விஜய் வந்தவுடன அடபாவிகளா திருப்பாச்சி படத்த வேலாயுதம் எண்டு தந்துட்டங்கள் எண்டு கடைக்காரன திட்டியும் போட்டன் பிறகுதான் தங்கச்சிய மாத்தி புதுசா எடுத்துருக்குரான்கள் எண்டு விளங்கிச்சு 
ஒரு படம் தொடக்கி 30 நிமிஷம் ஓடுறதுக்குள்ள எத்தனை படங்களோட நினைப்பு வருது விஜய்க்கு காட்டு காட்டு நல்ல படங்கள் தெரிவு செய்யிற புத்திய காட்டு கடவுளே ...
இதுக்குள்ள ராசா வேற மாஸ் ஏன்டா விசை தான் சாரி விஜய் ..  எண்டு சொல்லிப்போட்டார் .. தம்பியார் நல்ல படம் தெரிவு செய்து 
நடிக்க பழகிட்டார் இந்த கதைய கேட்டவுடன ஐயோ நான் நடிக்க மாட்டன் எண்டவுடன பார் உனக்கு முன்னாடியே இந்த படத்த 
ஒரு இளிச்ச வாயன வைச்சு எடுத்து காட்டுறன் எண்டு சபதம் போட்டு எடுத்த மாதிரி இருக்கு ...
பல ரசிக ரசிகைக்களை கொண்ட ஒரு ஜீரோ சாரி ஹீரோ வை வைத்து படம் எடுத்த ராசாக்கு பாராட்டுக்கள் ....