நீண்ட நாட்களுக்கு பிறகு எழுத வைத்த வேலாயுதம் மற்றும்7 ஆம் அறிவு திரைப்படங்களுக்கு நன்றி
உண்மையிலேயே நான் விஜய் ரசிகன் இப்ப இல்ல அப்ப......
எனக்கு தியட்டர் போய் பாக்குற வாய்ப்பு கிடைக்கல வீட்டDVD பிளேயர் இருக்கு நம்புங்கோ....
செக்கன்ட் காப்பி வாங்கி போட்டு பாத்தன் பாத்துட்டு தான் எழுதுறன்.
வேலாயுதம்
விஜய்க்காக வருந்துகின்றேன் எவளவோ பண்ணிட்டம் இத பண்ணமாட்டமோ
பாவம் விஜய் அரசியல் பக்கம் போறது தான் நல்லம் படம் ஆரம்பித்தவுடன் தாயின் மணிக்கொடி CD
போட்டுட்டனோ எண்டு திருப்ப எடுத்து பாத்தன் இல்ல இல்ல வேலாயுதம்தான்.
முதல் சீன்..>>
ஐயோ பிறகு மாறி வேடன் படம் போட்டுட்டனோ எண்டு நினைச்சன் வேடனில அக்கா ஜெனிலியா இல்ல,,,,,............
பிறகு விஜய் வந்தவுடன அடபாவிகளா திருப்பாச்சி படத்த வேலாயுதம் எண்டு தந்துட்டங்கள் எண்டு கடைக்காரன திட்டியும் போட்டன் பிறகுதான் தங்கச்சிய மாத்தி புதுசா எடுத்துருக்குரான்கள் எண்டு விளங்கிச்சு
ஒரு படம் தொடக்கி 30 நிமிஷம் ஓடுறதுக்குள்ள எத்தனை படங்களோட நினைப்பு வருது விஜய்க்கு காட்டு காட்டு நல்ல படங்கள் தெரிவு செய்யிற புத்திய காட்டு கடவுளே ...
இதுக்குள்ள ராசா வேற மாஸ் ஏன்டா விசை தான் சாரி விஜய் .. எண்டு சொல்லிப்போட்டார் .. தம்பியார் நல்ல படம் தெரிவு செய்து
நடிக்க பழகிட்டார் இந்த கதைய கேட்டவுடன ஐயோ நான் நடிக்க மாட்டன் எண்டவுடன பார் உனக்கு முன்னாடியே இந்த படத்த
ஒரு இளிச்ச வாயன வைச்சு எடுத்து காட்டுறன் எண்டு சபதம் போட்டு எடுத்த மாதிரி இருக்கு ...
பல ரசிக ரசிகைக்களை கொண்ட ஒரு ஜீரோ சாரி ஹீரோ வை வைத்து படம் எடுத்த ராசாக்கு பாராட்டுக்கள் ....
baass ennamo kovaththila eluthina maathiri irukku...but neenga namma aalu thaan.
ReplyDelete