அண்மையில் என் மண்ணுக்கு சென்றிருந்தேன்.
காலடி எடுத்து வைத்தவுடனே என்னை அறியாமல் கண்ணில் நீர்...
எனது கை என்னை அடிக்கவுமில்லை, என்விரல் கண்ணை குத்தவுமில்லை
ஆனாலும் கண்ணீர் பல வருடங்களுக்கு பிறகு சென்றதாலாக இருக்கலாம் .
கொடுமைகளை சுமந்த மண், அடிகளை தாங்கிய மண், நெருப்பை ஏந்திய மண், இரத்தம் தேங்கிய மண் இவ்வாறு நிறைய பெயர்களை சுமந்த மண்
என்னை வாரி முத்தமிட்டது மரத்தின் வேரால் தடக்க வைத்து...
எவளவு வீரமான மண் இன்று சோகமாய் காட்சி தருகிறது .என் மகனே வா நீயாவது இருக்குறியே என்று என்னை அணைப்பது போல் இருந்தது .
வாய்க்கால்களை பார்க்கும் போது செங்குருதி ஓடுவது போல் இருக்குறது. என்னை அறியாமல் மனது வலிக்கிறது கனக்கிறது எவளவு கொடுமைகளை
தாங்கியிருக்குறது எனது மண். எத்தனை மைந்தர்களை இழந்திருக்குறது நினைக்கவே உள்ளம் கலங்குகிறது
ஒரு தாய் தான் பெற்ற அனைத்து பிள்ளைகளையும் இழந்தால் எப்படி இருப்பாள்? அப்படி தான் இன்று என் மண் இருக்குறது.
தன்னால் இனி திருப்பி அடிக்க முடியாது.., கொடுமைகளை துரோகங்களை என் பிள்ளைக்களுக்கு திணிக்காதீர்கள்.. என்று யாரையோ பாத்து கெஞ்சுவது போல் இருக்குறது வன்முறை கொண்டு திருப்பி அடிப்பதால் பலனில்லை கல்வியால், அறிவால், புத்தியால், மதியால், நடத்தையால் ,கௌரவத்தால், தர்க்கத்தால், பொறுமையால், புலமையால், இசையால் திருப்பி அடியுங்கள் என்று தன் பிள்ளைகளுக்கு எஞ்சியவர்களுக்கு சொல்வது போல் இருக்குறது,
மண்ணின் பெருமையை நிலைநாட்ட அடி தடி மட்டுமல்ல இப்படியும் நிலை நாட்டலாம் இனி ஒரு புது விதி செய்வோம் என்று சொல்வதை விட செய்யுங்கள் உங்கள் விதிகளை நீங்களே எழுதுங்கள்
மழை பெய்யும் போது என் ஊர் மண் மணக்கவில்லை மாறாக இரத்த வாடை தான் வருகிறது.
தயவு செய்து நாளைய சமுதாயம் மண்ணை உங்கள் தகமைகளால் குளிரவையுங்கள் .
மதுக்கடை வாசலை நிரப்ப யாரும் முன்வரவேண்டம்.. பாடசாலை வாசலை நிரப்புங்கள் .
விளையாட்டுக்களை ஊக்குவியுங்கள் நாளைய சமுதாயத்தால் தாய் போலே தாய் மண்ணும் குளிரும் .....
இழப்புக்களை ஈடுகட்ட முடியாது ஓரளவு ஈடுகட்ட முயற்சி எடுங்கள் இதை தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை ....
என்றுமே என் தாய்... என் மண் தான்... வீரம் சுமந்த என் மண், வீரர்களை தந்த மண் வீரத்துக்கு எப்பவுமே பெயர் பெற்று விளங்கும்.
இனி எமக்கு விவேகம் தான் முக்கியம்
குனிவதும் பணிவது இனி இல்லை தமிழ் குடியினிற்கழிவில்லை
இருளே விலகி ஒளி விடு .......